மாவட்ட செய்திகள்

மின்மாற்றியில் சிக்கி செத்த மயில் + "||" + The peacock got stuck in the transformer and died.

மின்மாற்றியில் சிக்கி செத்த மயில்

மின்மாற்றியில் சிக்கி செத்த மயில்
துறையூர் அருகே மின்மாற்றியில் சிக்கி மயில் செத்தது.
துறையூர், 
துறையூரை அடுத்துள்ள பெரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மணியம்பட்டி கிராமத்தில் உள்ள மின் மாற்றியில் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மயில் எதிர்பாராத விதமாக சிக்கி, மின்சாரம் பாய்ந்து உடல் கருகி செத்தது. இதுபற்றி துறையூர் மற்றும் புலிவலம் மின்வாரிய அதிகாரிகளுக்கும், வனத்துறைக்கும் அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் இதுவரை யாரும் அந்த மயிலின் உடலை அகற்றவில்லை. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கி உள்ளது. எனவே அந்த மயிலின் உடலை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.