மாவட்ட செய்திகள்

சாவிலும் இணைபிரியாத நண்பர்கள் + "||" + Death and inseparable friends

சாவிலும் இணைபிரியாத நண்பர்கள்

சாவிலும் இணைபிரியாத நண்பர்கள்
ஜெயங்கொண்டத்தில் நண்பர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி சாலையில் அல்லா கோவில் அருகே வசித்து வசிப்பவர் மகாலிங்கம் (வயது 78). இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். சிறிய அளவிலான டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இவரது வீட்டின் எதிர்புறம் வசித்து வருபவர் ஜெயிலாபுதின்(வயது 66). அரிசி அரவை ஆலை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் சுமார் 40 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். இவர்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவரது இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்றனர். வயது மூப்பின் காரணமாக இருவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருந்தாலும் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். 40 ஆண்டுகளாக ஒன்றாக பழகி வந்ததுடன் சாவிலும் இணைபிரியாத நண்பர்களுக்கு உறவினர்களும், அப்பகுதி மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.