மாவட்ட செய்திகள்

வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க வசதி + "||" + Facility to track candidates' agents

வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க வசதி

வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க வசதி
வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவை,

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜி.சி.டி. கல்லூரியில் உள்ள ஸ்டிராங் ரூம்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. 

இதற்காக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைகளில் 70 கேமராக்களும், வெளிப்புற  பகுதிகளில் 80 கேமராக்களும் என மொத்தம் 150 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கட்சிகளின் முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று கலெக்டர் நாகராஜன் கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டு, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுரை கூறினார்.