மாவட்ட செய்திகள்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் + "||" + Wasted drinking water

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
நயினார்கோவிலில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாகுகிறது.
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் தேவர் சிலை முன்பு காவிரி குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வீணாகி செல்கிறது. நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல பகுதிகளுக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் வினியோகம் ஆகிறது. மேலும் பலருக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. 
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் கூறினர். தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேவை அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, இதுபோன்ற நேரத்தில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

1. குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
தளவாய்புரம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
2. குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
தளவாய்புரம் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.
3. குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
4. வீணாகும் குடிநீர்
வீணாகும் குடிநீர்
5. வீணாகும் குடிநீர்
வீணாகும் குடிநீர்