மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் காபி தோட்டம் எரிந்து சேதம் + "||" + Damage to the coffee plantation in yercaud

ஏற்காட்டில் காபி தோட்டம் எரிந்து சேதம்

ஏற்காட்டில் காபி தோட்டம் எரிந்து சேதம்
ஏற்காட்டில் காபி தோட்டம் எரிந்து சேதம் அடைந்தது.
ஏற்காடு:
ஏற்காடு தாலுகா வாழவந்தி பகுதியை சேர்ந்தவருக்கு சொந்தமான காபி தோட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் காபி செடிகள், சவுக்கு மரங்கள் மற்றும் மிளகு கொடிகள் எரிந்து நாசமானது. நேற்று அதிகாலை தோட்டத்திற்கு சென்று பார்த்த அதன் உரிமையாளர்கள் செடிகள் எரிந்து போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் இது குறித்து ஆய்வு செய்தனர். தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.