மாவட்ட செய்திகள்

கொங்கணாபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா -சாமி வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலம் + "||" + Mariamman Temple Festival near Konganapuram

கொங்கணாபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா -சாமி வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலம்

கொங்கணாபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா -சாமி வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலம்
கொங்கணாபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சாமி வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
எடப்பாடி:
கொங்கணாபுரத்தை அடுத்த ரங்கம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதைத்தொடர்ந்து சிவன், பார்வதி உள்பட பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலம் நடைபெற்றது.