பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 April 2021 10:47 PM GMT (Updated: 7 April 2021 10:47 PM GMT)

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

சேலம்:
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணும் மையம்
சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் சங்ககிரி விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து எண்ணப்படுகின்றன.
இந்தநிலையில், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 4 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு காவல் துறையின் 3 அடுக்கு பாதுகாப்பில் 132 மத்திய பாதுகாப்பு படையினரும், 76 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 293 சேலம் மாநகர் மற்றும் சேலம் மாவட்ட காவல் துறையினரும் என மொத்தம் 501 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு பணி
வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சங்ககிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வேடியப்பன், எடப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கம் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story