மாவட்ட செய்திகள்

சாயர்புரத்தில்காங்கிரஸ் பிரமுகர் நூதன போராட்டம் + "||" + innovative struggle of the congress leader in syarpuram

சாயர்புரத்தில்காங்கிரஸ் பிரமுகர் நூதன போராட்டம்

சாயர்புரத்தில்காங்கிரஸ் பிரமுகர் நூதன போராட்டம்
சாயர்புரத்தில் காங்கிரஸ் பிரமுகர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாயர்புரம்,:
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து சாயர்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சாயர்புரம் மெயின் பஜாரில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வீணாகியது.
எனவே அங்கு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனே சரி செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி பிரமுகர் அமிர்தராஜ் நேற்று காலையில் சாலையோரம் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று அமிர்தராஜ் தெரிவித்தார்.