10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிக்கு ரூ.30 கோடி வரை செலவு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்


10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிக்கு ரூ.30 கோடி வரை செலவு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
x
தினத்தந்தி 8 April 2021 2:56 PM GMT (Updated: 8 April 2021 2:56 PM GMT)

தேர்தல் பணிக்கான செலவு 30 கோடி

கோவை

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிக்கு ரூ.30 கோடி வரை செலவு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டமன்ற தேர்தல்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கோவை ஜி.சி.டி. கல்லூரியில் உள்ள ஸ்டிராங் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. 

அங்கு மொத்தம் 150 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கு ஆன செலவுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் மொத்தம் 4,427 வாக்குச்சாவடிகளுக்கு சாமியானா பந்தல், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு தலா ரூ.5,600 செலவு செய்யப்பட்டது. 

இதுதவிர ஒவ்வொரு வாக்குச்சாவடிக் கும் கொரோனா கையுறைகளை தனியாக போட தலா ரூ.400 செலவில் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டன. 

கூடுதல் செலவு

மாற்றுதிறனாளிகளை அழைத்து செல்ல சக்கர நாற்காலி, வாக்குச்சா வடி ஊழியர்களுக்கு உணவு, மற்றும் கொரோனா தடுப்புக்கு என்று சுகாதார தொழிலாளிகளுக்கு தலா ரூ.250 கூலி, பதற்றமான 861 வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தும் செலவு, கொரோனா தடுப்பு பொருட்கள் என்று இந்த முறை தேர்தல் நடத்த கூடுதல் செலவு ஆகி உள்ளது.

இதுதவிர வாக்கு எண்ணும் மையத்தில் மட்டும் அடிப்படை வசதி, கண்காணிப்பு கேமரா, தடுப்புகள் உள்ளிட்ட வசதிகளை செய்ய சுமார் ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து சுமார் ரூ.30 கோடி வரை செலவாகி உள்ளது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ரூ.20 கோடி வரை செலவானது. இந்த தேர்தலுக்கு மேலும் ரூ.10 கோடி கூடுதலாக செலவாகி உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story