வேலூர் மாவட்டத்தில் 8,050 தபால் வாக்குகள் பதிவு


வேலூர் மாவட்டத்தில்  8,050 தபால் வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 8 April 2021 4:45 PM GMT (Updated: 8 April 2021 4:45 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 8,050 தபால் வாக்குகள் பதிவு

வேலூர்

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதர தேர்தல் பணியாளர்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரர்கள் ஆகியோருக்கு தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி மொத்தம் 20 ஆயிரத்து 61 பேருக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்தநிலையில் நேற்று வரை காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு 1,933 அஞ்சல் வாக்குகளும், வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு 1,771 அஞ்சல் வாக்குகளும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு 1,575 அஞ்சல் வாக்குகளும், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு 1,550 அஞ்சல் வாக்குகளும், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு 1,221 அஞ்சல் வாக்குகளும் என மொத்தம் 8,050 அஞ்சல் வாக்குகள் பதிவு செய்து வரப்பெற்றுள்ளன. 

அஞ்சல் வாக்குச் சீட்டினை பெற்றுள்ள நபர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டில் தங்களது வாக்கினை பதிவு செய்து வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற 2-ந் தேதி காலை 8 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து சேரும் வகையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும்  கலெக்டருமான சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Next Story