மாவட்ட செய்திகள்

நாமக்கல் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி + "||" + worker drowned in well

நாமக்கல் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

நாமக்கல் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
நாமக்கல் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரம் கோனாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மொபட்டில் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று பெரியப்பட்டியை சேர்ந்த சின்னதம்பி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மாரப்பன் பிணமாக மிதந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் நாமக்கல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அவரது மனைவி வாசுகி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றில் வடமாநில வாலிபர் பிணம்; கொலையா போலீசார் விசாரணை
இருக்கூர் அருகே கிணற்றில் வடமாநில வாலிபர் பிணம் மிதந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. புழுதிவாக்கத்தில் குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி
புழுதிவாக்கத்தில் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி அண்ணன்-தம்பி இருவரும் பலியானார்கள்.
3. குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி பொங்கல் பண்டிகை கொண்டாட வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
தோகைமலை அருகே பொங்கல் பண்டிகை கொண்டாட வந்த அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
4. களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்
களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்.
5. டைட்டானிக் பட பாணியில் போட்டோ எடுக்க முயன்று உயிரிழந்த புதுமண ஜோடி பரிசலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து சம்பவம்
மைசூரு மாவட்டம் திருமகூடலுவில், ஆற்றில் பரிசலில் சென்று டைட்டானிக் பட பாணியில் போட்டோ எடுக்க முயன்ற புதுமண ஜோடி கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.