மாவட்ட செய்திகள்

வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் + "||" + Heavy traffic congestion in Valparai

வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல்

வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல்
போலீசார் இல்லாததால் வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
வால்பாறை

போலீசார் இல்லாததால் வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
 
வால்பாறை 

குளு, குளு சூழலையும், அருவிகளையும், பசுமை மாறா காடுகளையும் தனக்குள் வைத்திருக்கும் மலைபிரதேசமான வால்பாறை சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

தற்போது வால்பாறையில் கடும் வெயில் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் இங்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

கடும் போக்குவரத்து நெரிசல் 

வால்பாறையில் ஒரே ஒரு மெயின்சாலை உள்ளது. இந்த சாலையில் தபால் நிலையம் முன்பு, பழைய பஸ்நிலையம், காந்திசிலை பஸ்நிலையம், ஸ்டேண்ட்மோர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் போலீசார் நின்று போக்குவரத்தை சரிசெய்வது வழக்கம். 

ஆனால் தற்போது இந்த 4 இடங்களிலும் போலீசார் நிற்பது இல்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதுடன், சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- '

போலீசார் இல்லை 

வால்பாறையில் ஒரே ஒரு மெயின்ரோடுதான் உள்ளது. இந்த சாலையின் தூரமும் மிகக்குறைவு. ஆனால் அங்குதான் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. 

கடந்த ஒரு ஆண்டாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை நியமிக்கவில்லை. இதனால் இங்கு சாலை ஓரத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. 

குறிப்பாக சுற்றுலா வரும் பயணிகள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகிறார்கள். இதை வாகன ஓட்டிகள் கூறினால் தகராறுதான் ஏற்பட்டு வருகிறது.

சிக்கிய ஆம்புலன்ஸ் 

தினந்தோறும் இதுபோன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லக்கூட சிரமமாக இருக்கிறது. இந்த சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. 

அப்போது திடீரென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அந்த ஆம்புலன்ஸ் அதில் சிக்கி தவித்தது. இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்  ½ கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையை கடக்க 20 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிடுகிறது. 

போக்குவரத்தை கண்காணிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் இங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையமும் திறக்கப்பட்டது. 

ஒழுங்குபடுத்த நடவடிக்கை

ஆனால் அது முழு அளவில் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகதான் இருக்கிறது. எனவே இங்கு அடிக்கடி ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை காரணமாக 3 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2. சின்னசேலம்-மூங்கில்பாடி சாலையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
சின்னசேலம் மூங்கில்பாடி சாலையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
3. தடுக்க வழிகள் இல்லாமல் தடுமாற்றம்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஈரோடு மாநகரம்- தினசரி நடக்கும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் தினசரி நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது, இதை தடுக்க வழியில்லாமல் போக்குவரத்து போலீசார் திணறும் நிலை உள்ளது.
4. சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டும்போது போக்குவரத்து நெரிசல்
சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த புளிய மரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று போக்குவரத்தில் சிக்கி தவித்தனர்.
5. குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; பக்தர்கள் கூட்டமாக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு
ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் குன்றத்தூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோவிலில் கொரோனா விதிமுறைகளின்படி நள்ளிரவு முதல் கோவில் நடை திறக்காமல் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 6 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.