மாவட்ட செய்திகள்

ஊத்தங்கரை அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது + "||" + one arrest

ஊத்தங்கரை அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது

ஊத்தங்கரை அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது
ஊத்தங்கரை அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் வசித்து வருபவர் மாரி மகன் வெங்கடாசலம் (வயது 50). இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவசர கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு மர்ம நபர்கள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் மற்றும் போலீசார் அந்த தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது கஞ்சா பயிரிட்டது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் மூங்கிலேரி சென்று வெங்கடாசலத்திடம் விசாரணை நடத்தினர். அவரது நிலத்தில் பயிரிட்டு இருந்த கஞ்சா செடியையும் அவரது வீட்டில் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்து கைது செய்தனர். ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.