ஊட்டத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


ஊட்டத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 April 2021 7:33 PM GMT (Updated: 8 April 2021 7:33 PM GMT)

ஊட்டத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


கல்லக்குடி
புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி காப்பு கட்டு, முதலாம் மண்டகப்படியுடன் தொடங்கியது. தொடர்ந்து அய்யனார் காப்பு, குடியழைப்பு அம்மன் திருவிழா நடைபெற்றது. கடந்த 31-ந்தேதி முதல் அம்மன் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கடந்த 5-ந்தேதி நள்ளிரவு முள் படுகளம் நடைபெற்றது. அப்போது, சுமார் 100 அடி நீளத்தில் 5 அடி அகலத்துக்கு கருவேல முட்களை பரப்பி அதில் வேண்டுதல் நிறைவேற்றுவோர் படுத்து அம்மனை வழிபட்டனர். மறுநாள் தெரு பொங்கல், நேற்று முன்தினம் கோவில் பொங்கல் வைக்கப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மதியம் 1 மணி அளவில் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலையில் மஞ்சள் நீர் விழா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடையாற்றி உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரிகள் ஜெய்கிஷன், முத்துராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story