மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் வீரர் 2-வது இடம் பிடித்து சாதனை + "||" + Dindigul player took 2nd place record

திண்டுக்கல் வீரர் 2-வது இடம் பிடித்து சாதனை

திண்டுக்கல் வீரர் 2-வது இடம் பிடித்து சாதனை
மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் திண்டுக்கல் வீரர் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல்: 

மாநில அளவிலான ஆணழகன் போட்டி வேலூரில் நடந்தது. 

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்.

 இதில் திண்டுக்கல் சார்பில் பங்கேற்ற சரவணன், 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

மேலும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதையொட்டி, வெள்ளிப்பதக்கம் வென்ற சரவணனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ் மற்றும் பளு தூக்கும் சங்கத்தினர், உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.