மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு + "||" + Reduction of water discharging from Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து வினாடிக்கு 1,்200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.61 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 91 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட திறப்பு பலமடங்கு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.