சென்னையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 8 பேர் கைது


சென்னையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 8 பேர் கைது
x
தினத்தந்தி 11 April 2021 5:52 PM IST (Updated: 11 April 2021 5:52 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 8 பேர் கைது.

சென்னை, 

போலி இணையதளங்கள் மூலம் அன்னிய செலாவணி பங்கு வர்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கைதான தேனாம்பேட்டையை சேர்ந்த சையது அபுதாகீர் (வயது 34), சையது அலி உசேன் (40) ஆகிய 2 பேர் மீதும், அமைந்தகரை பகுதியில் ஜெயந்தி என்பவர் கொலை வழக்கில் கைதான அந்தோணிகுமார் (36), செல்லப்பன் (49), பாலாஜி (23) ஆகிய 3 பேர் மீதும், மடிப்பாக்கத்தில் முதியவரை தாக்கி ரூ.6 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் சிக்கிய பிரபு என்ற அப்புகுட்டி (24), ஐசக் (31), தினேஷ் என்ற குரு (28) ஆகிய 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார். இதையடுத்து 8 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story