நாமக்கல்லில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்,
நாமக்கல் லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சு. சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல், மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 5-ந் தேதி சுரேஷூக்கும், அவரது மனைவி மஞ்சுவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து இரவு படுக்கை அறைக்கு சென்ற சுரேஷ், மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த மஞ்சு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் சுரேசை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story