பெரம்பலூர், குன்னம் பகுதிகளில் கோடை மழை


பெரம்பலூர், குன்னம் பகுதிகளில் கோடை மழை
x
தினத்தந்தி 11 April 2021 7:28 PM GMT (Updated: 2021-04-12T00:58:07+05:30)

பெரம்பலூர், குன்னம் பகுதிகளில் கோடை மழை பெய்தது.

பெரம்பலூர்:

கோடை மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்களில் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் கொடுமையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வெயிலின் அளவு 98.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலையில் பல்வேறு இடங்களில் திடீரென்று கோடை மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மண் வாசனை, காற்றுடன் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குன்னம்
குன்னம் பகுதியில் பீல்வாடி, பேரளி, குன்னம், ஓதியம், அசூர், வரகூர், பேரளி, மருவத்தூர், அந்தூர், பரவாய், வேப்பூர், நன்னை, கல்லை, ஓலைப்பாடி, ஆண்டிகுரும்பலூர், கொளப்பாடி, நல்லறிக்கை, கொத்தவாசல், புதுவேட்டக்குடி, காடூர் ஆகிய ஊர்களில் நேற்று மதியம் சுமார் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

Next Story