வாழை இலை குளியல் குறித்து விழிப்புணர்வு


வாழை இலை குளியல் குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 13 April 2021 1:38 AM IST (Updated: 13 April 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

வாழை இலை குளியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாழை சிலர் வாழை இலைகளை உடலில் சுற்றி கட்டியபடி ஆற்றங்கரையில் சிறிது நேரம் படுத்திருந்தனர். பின்னர் ஆற்றில் குளித்தனர். இது குறித்து சித்த மருத்துவர்கள் கூறுகையில், நாட்பட்ட கழிவுகள் உடலில் தேங்கி இருப்பதை உடலில் இருந்து வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிப்பது வாழை இலை குளியல் ஆகும். இந்த குளியல் உடலில் புதிய செல்களை உருவாக்கி புத்துணர்வு பெற வைக்கும். பசியின்மை, கால் வீக்கம், ரத்த சோகை, தீராத வயிற்றுப்புண், அளவுக்கதிகமான சூடு, தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் குணமாக கெட்ட கொழுப்பினை கரைக்கவும் வாழை இலை குளியல் உதவுகிறது. மாதம் ஒரு முறை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். தீக்காயமடைந்தவர்களுக்கும் வாழை இலையை பயன்படுத்துவது வழக்கம், என்றனர். இந்நிகழ்ச்சியில் கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க செயலாளர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story