வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 April 2021 1:52 AM IST (Updated: 13 April 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

அம்பை அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் முப்பிடாதி மகன் கிங்ஸ்டன் (வயது 26). திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இவரை சமீபத்தில் அம்பை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். 

கிங்ஸ்டனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் விஷ்ணு ஏற்று, கிங்ஸ்டனை குண்டர்  சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்காக உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டையில் போலீசார் சமர்ப்பித்தனர்.

Next Story