கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை


கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை
x
தினத்தந்தி 13 April 2021 6:30 PM GMT (Updated: 13 April 2021 6:30 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

ராமநாதபுரம்,
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு கொரோனா வார்டு 300 படுக்கைகளுடன் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தேவிபட்டினம், உச்சிப்புளி உள்பட 7 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பராமரிப்பு மையங்களும் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன.
45 வயது மேற்பட்டோருக்கு கிராம சுகாதார செவிலியர் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை என்பது மாவட்டத்தில் இல்லை. தற்போது 8 ஆயிரம் மருந்துகள் இருப்பு உள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story