முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம்


முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம்
x
தினத்தந்தி 14 April 2021 2:47 AM IST (Updated: 14 April 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது

 கரூர்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆகவே பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.  முககவசம் அணியாமல்  வெளியிடங்களுக்கு வருபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கரூர் மனோகரா கார்னர் அருகே தாசில்தார் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.


Next Story