சென்னை விமான நிலையத்தில் அந்தமான் செல்ல வந்த கல்லூரி மாணவருக்கு கொரோனா
73 பேர் விமான நிறுவன கவுண்ட்டரில் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு சோதனைகளை முடித்து விட்டு விமானத்தில் ஏறினார்கள்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அந்தமானுக்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த 73 பேர் விமான நிறுவன கவுண்ட்டரில் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு சோதனைகளை முடித்து விட்டு விமானத்தில் ஏறினார்கள்.
அப்போது அந்தமானைச்சோ்ந்த தமிழரசன் (வயது 24) என்பவா் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தார். அவர் சென்னையில் தங்கி இருந்து உயா் கல்வி படித்து வந்தார். தமிழரசன் தனது சொந்த ஊா் செல்வதற்காக விமான நிலையம் வந்து இருந்தார். விமான நிறுவன கவுண்ட்டரில் அவருடைய மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கி பரிசோதித்தனா். அதில் தமிழரசனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தமிழரசனுக்கு போர்டிங் பாஸ் கொடுக்காமல் அவரது விமான பயணத்தை ரத்து செய்தனா். அதோடு அவரை வேறு எங்கும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விமானநிலைய சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனா்.
சுகாதாரத்துறையினா் தமிழரசனுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அணிவித்து தனி ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னர் சுகாதாரத்துறையினா் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கவுண்ட்டா் மற்றும் புறப்பாடு பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினா்.
Related Tags :
Next Story