ஏரலில் விவசாயிகள் போராட்டம்
ஏரலில் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
ஏரல்:
ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசன பகுதி விவசாயிகளுக்கு முன் கார் சாகுபடி செய்ய அரசு அனுமதி வழங்க கோரியும், உரம் விலையை குறைக்க வலியுறுத்தியும் தாலுகா விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏரல் தாலுகா விவசாய சங்க செயலாளர் சுப்புதுரை தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் விவசாய சங்கதலைவர்கள் செல்வநாயகபுரம் பொன்ராஜ், கணபதிசமுத்திரம் கணிராஜ், ஆறுமுகமங்கலம் ஜெயராமன், அரசன்குளம் ராஜன் உள்பட சுற்றுவட்டார பகுதியை விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story