கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் சாவு ஒரே நாளில் 167 பேருக்கு தொற்று


கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் சாவு ஒரே நாளில் 167 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 April 2021 4:19 PM GMT (Updated: 16 April 2021 4:19 PM GMT)

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 167 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 167 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
முதியவர் சாவு
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 60 வயது முதியவர். இருமல், சளி, தொந்தரவு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 13-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அந்த முதியவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
167 பேருக்கு தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 167 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 820 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 662 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story