கொரோனா பரவல் அதிகரிப்பு: நெல்லை அறிவியல் மையம் மூடல்


கொரோனா பரவல் அதிகரிப்பு:  நெல்லை அறிவியல் மையம் மூடல்
x
தினத்தந்தி 17 April 2021 12:43 AM IST (Updated: 17 April 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நெல்லை அறிவியல் மையம் மூடப்பட்டது.

நெல்லை:
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நெல்ைல அறிவியல் மையம்  மூடப்பட்டது.

அறிவியல் மையம்

நெல்லை கொக்கிரகுளத்தில் மாவட்ட அறிவியல் மையம் அமைந்துள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் வந்து அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அரங்குகளை பார்வையிட்டு செல்வார்கள். மேலும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவலையொட்டி இந்த அறிவியல் மையம் மூடப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது

மூடல்

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதில் ஒரு பகுதியாக அறிவியல் மையத்தை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டது.

இதையொட்டி நெல்லை அறிவியல் மையம் மூடப்பட்டது. அதாவது வருகிற மே மாதம் 15-ந் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இதற்கான அறிவிப்பு அறிவியல் மையத்தின் நுழைவு வாசலில் ஒட்டப்பட்டு உள்ளது.

Next Story