கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அதிகரிப்பு கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுமா?


கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அதிகரிப்பு கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுமா?
x
தினத்தந்தி 17 April 2021 7:47 PM GMT (Updated: 17 April 2021 7:47 PM GMT)

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

எடப்பாடி:
கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு கொங்கணாபுரம், எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடு, கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் ஆடு, கோழிகள் விற்பனை அதிகரித்தது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. ஒரு நாட்டுக்கோழி ரூ.250 முதல் ரூ.1000 வரை விற்பனையானது.
அதே நேரத்தில் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், பெரும்பாலானோர் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். இருப்பினும் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக மாறியது. எனவே வரும் வாரங்களிலாவது கொரோனா பரவலை தடுக்க ஆடு, கோழி விற்க, வாங்க வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story