அறிக்கை வருவதில் தாமதத்தை தவிர்க்க நவீன முறையில் கொரோனா பரிசோதனை; மராட்டிய மந்திரி ராஜேஷ் தோபே தகவல்


அறிக்கை வருவதில் தாமதத்தை தவிர்க்க நவீன முறையில் கொரோனா பரிசோதனை; மராட்டிய மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
x
தினத்தந்தி 18 April 2021 9:34 AM GMT (Updated: 18 April 2021 9:33 AM GMT)

அறிக்கை வருவதில் தாமதத்தை தவிர்க்க நவீன வசதிகள் மூலம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

பரிசோதனைகள் அதிகரிப்பு
மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு உள்ளது. அரசு நோய் பரவலை கட்டுப்படுத்த கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நவீன வசதிகளை பயன்படுத்தி மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தெர்மோ பிஷ்சர், அபாட் போன்ற நிறுவனங்கள் நவீன கருவிகளுடன் வர உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தினமும் 10 ஆயிரம் பரிசோதனைகளை செய்ய முடியும். இதேபோல வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு சோதனை மேற்கொள்ள நடமாடும் ஆய்வக வசதியையும் அமைத்து உள்ளோம்.

விரைவில் முடிவு
மாநிலத்தில் 70 சதவீத சோதனைகள் ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் தான் மேற்கொள்ளப்படுகிறது. மற்றவை ஆண்டிஜன் முறை சோதனைகள் ஆகும். கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தினந்தோறும் 2.3 லட்சம் சோதனைகள் செய்யப்படுகிறது. ஆனால் அதன் முடிவுகள் வர 3 முதல் 4 நாட்கள் ஆகின்றன. எனவே விரைவில் சோதனை முடிவுகளை பெறவும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story