கலெக்டரிடம் மனு


கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 19 April 2021 10:46 AM GMT (Updated: 19 April 2021 10:46 AM GMT)

திருமண மண்டபங்களில் 50 சதவீத விருந்தினர்களுடன் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்
திருமண மண்டபங்களில் 50 சதவீத விருந்தினர்களுடன் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்க மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில், திருப்பூா் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது தமிழகம் முழுவதும் உள்ள ஒலி ஒளி ஜெனரேட்டர் பந்தல், சாமியானா பர்னிச்சர் சமையல் பாத்திரங்கள் மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் என பல்வேறு தொழில்களை ஏராளமானவர்கள் செய்து வருகிறார்கள்.
இந்த தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தருவது அல்ல. விஷேசங்கள், விழாக்கள் நடைபெறும் காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் வேலை இருக்கும். இந்த தொழில்களில் ஆயிரக்கணக்கான கடை உரிமையாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
50 சதவீத விருந்தினர்களுடன்
கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் போது பலர் வேலைவாய்ப்பு இழந்து, கடும் நஷ்டத்தையும், சிரமத்தையும் சந்தித்தோம். தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த தொழில் செய்து வருகிறவர்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். சமூக இடைவெளியுடன் தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் 50 சதவீதம் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல் திருமண மண்டபங்களின் கொள்ளளவில் 50 சதவீதம் விருந்தினர்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி கோவில், ஆலயம் மற்றும் மசூதி போன்ற அனைத்து மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த கூட்டங்கள் நடத்த சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். எங்களது வாழ்வாதாரத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
முன்னதாக மனு கொடுக்க வந்தவர்கள் பல்லடம் ரோட்டில் தனியார் மண்டபத்தில் இருந்து மேளதாளம், முழுங்க ஊர்வலமாக வந்தனர். அப்போது சமையல் பாத்திரங்கள், மைக் செட்டுகள், வாழை இலை, மின் விளக்குகள் உள்ளிட்ட பொருட்களையும் கொண்டு வந்தனர்.
----------
புட்நோட்
--------
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மேள, தாளம் முழங்க மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
-------

Next Story