ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று


ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 19 April 2021 6:03 PM GMT (Updated: 19 April 2021 6:03 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 522 ஆக உயர்ந்துள்ளது.

புதுக்கோட்டை, ஏப்.20-
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 522 ஆக உயர்ந்துள்ளது.
82 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. முதல் நாளைவிட மறுநாளில் இரட்டிப்பாக உயர்கிறது. அதேநேரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்வோரும் உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி
மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 522 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நோய் பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கில் கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
அரிமளம்
இதேபோல் அரிமளம் ஒன்றியம் நமணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது ஆண், கடியாபட்டி கடை வீதியை சேர்ந்த 33 வயது ஆண், கடியாபட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 65 வயது ஆண், கே.ராயவரம் கிராமத்தை சேர்ந்த 44 வயது, தெக்கூர் கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண், ஓணாங்குடி கிராமத்தை சேர்ந்த 31 வயது ஆண், மற்றும் கீரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 33 வயது ஆண், 21 வயது பெண், 2 வயது குழந்தை, 55 வயது பெண் ஆகிய 11 பேருக்கு நேற்று கொரோணனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story