மாவட்ட செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி + "||" + Car crash kills worker

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி
கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
கொட்டாம்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மயிலாப்பூரை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கொட்டாம்பட்டிக்கு வந்துவிட்டு பள்ளப்பட்டி நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். சின்னக்கொட்டாம்பட்டி விலக்கு அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் விபத்து தொடர்பாக கார் டிரைவர் லீலாசங்கர்(36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 3 லட்சத்துக்கு கீழே இறங்கிய கொரோனா ஒருநாள் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
25 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழே இறங்கி உள்ளது. அதே சமயத்தில், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
2. கரூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பலி
கரூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,000 பேர் பலி; நேற்று ஒரே நாளில் 22 பேர் சாவு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 22 பேர் பலியான நிலையில், இதுவரை 1,000 பேர் இறந்துள்ளனர்.
4. காகித ஆலை முன்பு தொழிலாளர்கள் போராட்டம்
வேலாயுதம்பாளையம் அருகே கொரோனாவுக்கு தொழிலாளி பலியானார். இதையடுத்து காகித ஆலை முன்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி
கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்