பாளையங்கோட்டையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக நடித்தவர் கைது; கார் பறிமுதல்


பாளையங்கோட்டையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக நடித்தவர் கைது; கார் பறிமுதல்
x
தினத்தந்தி 19 April 2021 9:35 PM GMT (Updated: 2021-04-20T03:05:20+05:30)

பாளையங்கோட்டையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக நடித்தவர் கைது செய்யப்பட்டார். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் தன்னை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரி என்று பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மெல்வின் ஜெயக்குமார் (வயது 25) என்பதும், அவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் கைரேகை துணை சூப்பிரண்டாக வேலை செய்து வருவதாக கூறி வந்ததும், அவரது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் அதுதொடர்பான ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மெல்வின் ஜெயக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

Next Story