பெருமாள் கோவில் குளத்தை சுத்தம் செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்


பெருமாள் கோவில் குளத்தை சுத்தம் செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 April 2021 12:05 AM IST (Updated: 21 April 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

பெருமாள் கோவில் குளத்தை சுத்தம் செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் ஒன்றியம், தீயத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள குளத்தில் கோரை புற்கள், செடி, கொடிகள் மற்றும் தாமரை இருப்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இதனால் டெங்கு கொசுக்களால் காய்ச்சல் பரவுவதில் இருந்து பொதுமக்கள பாதிக்காமல் பாதுகாப்பதற்கும், அந்த குளத்தில் உள்ள செடி, கொடிகள் மற்றும் தாமரைகளை அகற்றி அந்த பெருமாள் கோவில் குளத்தை மண் மராமத்து செய்து தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
1 More update

Next Story