புளியமரத்தில் வேன் மோதியதில் பெண் சாவு


புளியமரத்தில் வேன் மோதியதில் பெண் சாவு
x
தினத்தந்தி 20 April 2021 6:55 PM GMT (Updated: 2021-04-21T00:25:57+05:30)

இளையான்குடி அருகே புளியமரத்தில் வேன் மோதியதில் பெண் இறந்தார்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே சாலையூர் மல்லிகை நகரை சேர்ந்தவர் முகமது இத்தீஸ்(வயது 47). இவர் புறவழிச்சாலையில் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். சம்பவத்தன்று அவர் தனது மனைவி ஜரினா பானுவுடன் இளநீரை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
இளையான்குடி- சிவகங்கை செல்லும் சாலையில் புதுக்குளம் கிராமம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் புளியமரத்தில் மோதி நின்றது. இதில் ஜரினா பானு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் முகமது இத்தீஸ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story