மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம்
மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய முத்து சாரதா மதுரை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பரிமளா திருவண்ணாமலை மக்கள் நீதி மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி காஞ்சனா சென்னை வரிவிதிப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்தநிலையில் தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ள கந்தகுமார் விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சிங்கராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளார். திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா விருதுநகர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story