திருவரங்குளம் சிவன்கோவிலில் பிரதோஷ வழிபாடு
திருவரங்குளம் சிவன்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருவரங்குளம், ஏப்.25-
திருவரங்குளத்தில் வரலாற்று புகழ் மிக்க சோழர் காலத்து சிவன் கோவில் உள்ளது. சனிபிரதோஷத்தையொட்டி கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், பழம், பன்னீர், மஞ்சள் உள்பட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நந்தி்பெருமானுக்கு மகாதீபம் காட்டினார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்மன் கோவில், திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில், திருமலை ராய சமுத்திரம் கதிர் காமேஸ்வர காமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சனிபிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடித்து வழிபட்டு சென்றனர்.

Related Tags :
Next Story