பாரில் நள்ளிரவில் மது விற்பனை; 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பாரில் நள்ளிரவில் மது விற்பனை; 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வடகாடு, ஏப்.25-
வடகாடு அருகே ஆவணம் கைகாட்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு அவ்வழியே வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் கைகாட்டி டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர். அதன்பேரில் வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் அந்த பாரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை கண்டதும் மது விற்றுக்கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 112 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சேகர், செல்லத்துரை ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story