குளித்தலை நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
குளித்தலை நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
குளித்தலை
குளித்தலை பகுதியில் தொடர்ந்து பலருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவிய வண்ணம் இருக்கிறது. அதன் காரணமாக குளித்தலை நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு நோய் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விளம்பரம் செய்தல், நோய் பாதித்தவர்களின் பகுதியில் கபசுர குடிநீர் வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளித்தலை எலிமெண்டரி ஸ்கூல் தெரு பகுதியில் நோய்த்தொற்று பாதித்த ஒருவரது வீட்டின் முன்பு நேற்று நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து அறிவுரை வழங்கினார்கள்.
Related Tags :
Next Story