கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 27 April 2021 1:31 AM IST (Updated: 27 April 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சுரண்டை, ஏப்:
சுரண்டை நகரப்பஞ்சாயத்து பகுதிகளில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கணக்கு மற்றும் தணிக்கை பிரிவு சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் சுரண்டை பஸ்நிலையம், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா? தனிமனித இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏசி பயன்படுத்தபடுகிறதா? பஸ்களில் அரசு விதிமுறை பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வணிக நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது வீ.கே.புதூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, நகரப்பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், நகரப்பஞ்சாயத்து அலுவலக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story