மாவட்ட செய்திகள்

கவுந்தப்பாடி அருகே நடந்த விபத்தில் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் பலி + "||" + accident death

கவுந்தப்பாடி அருகே நடந்த விபத்தில் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் பலி

கவுந்தப்பாடி அருகே நடந்த விபத்தில் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் பலி
கவுந்தப்பாடி அருகே நடந்த விபத்தில் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.
கவுந்தப்பாடி,

ஈரோடு அருகே உள்ள மாமரத்துப்பாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 63). ஜவுளி வியாபாரி. இவர் நேற்று காலை சத்தியமங்கலம் அருகே உள்ள ஏளூருக்கு சென்று துணியை விற்றுவிட்டு ஈரோட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். கவுந்தப்பாடிைய அடுத்த காமாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே வந்தேபோது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க அங்குள்ள ரோட்டை கடந்து சென்றார். 

சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் ரோட்டை கடந்து வந்தார். அப்போது அந்த வழியாக கோபி பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவன்மலை மகன் பூபதிராஜா (24) என்பவரின் மோட்டார்சைக்கிள் தர்மலிங்கம் மீது மோதியது. 

சாவு

இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தர்மலிங்கம், பூபதி ராஜா ஆகிய 2 பேரும் இறந்துவிட்டனர் என்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. கோபி அருகே வேன்-ஆட்டோ மோதல்; சிறுமி பலி
கோபி அருகே வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்.
3. விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு
விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார்.
4. லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; புது மாப்பிள்ளை பலி
ஓட்டப்பிடாரம் அருகே லாரி மீது மோட்டார்சை்ககிள் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
5. விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.