மாவட்ட செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை + "||" + Worker commits suicide by drinking poison

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மூலைக்கரைப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி, ஏப்:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தென்னவநேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவர் நாங்குநேரியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வழக்கம் போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வேதனை அடைந்த வேல்முருகன் விஷம் குடித்து மயங்கியதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோசப் ஜட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்டிட தொழிலாளி தற்கொலை
பேட்டையில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. முதியவர் விஷம் குடித்து தற்கொலை
சுரண்டையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. விவசாயி தற்கொலை
கடையநல்லூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நெல்லையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.