மாவட்ட செய்திகள்

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு + "||" + Worship

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நொய்யல்
வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் வல்லபைகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூக்கள் மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல் புகழிமலை கணபதி கோவில், ஈ.ஐ.டி.
விநாயகர் கோவில், வேலாயுதம்பாளையம் செல்வ விநாயகர் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல் கரைப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நொய்யல், அத்திப்பாளையம், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
இதேபோல் லாலாபேட்டை அருகே மேல வீட்டு கேட்டில் அமைந்துள்ள மகாகணபதி கோவிலில் நேற்று சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கூத்தாண்டவர் கோவிலில் எளியமுறையில் திருநங்கைகள் வழிபாடு
கொரோனா பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் கூவாகம் கிராமம் களையிழந்து காணப்பட்டது. அங்குள்ள கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் சிலர், எளிமையான முறையில் வழிபாடு செய்தனர்.
2. கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்
3. தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
5. சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.