நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் அமைக்க வேண்டும்- கலெக்டரிடம் காங்கிரசார் மனு
நெல்லையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் காங்கிரசார் மனு கொடுத்தனர்.
நெல்லை, மே:
நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் 2-வது கொரோனா அலை ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்பு அடைகிறார்கள். தமிழகத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கொரோனா தொற்று பரவலில் மாநிலத்தில் 5-வது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு நெல்லையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கொரோனா பாதித்து மருந்து கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சென்னையில் அரசு சார்பில் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் செயல்படுவது போல் நெல்லையிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் உடனடியாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story