குழாய் உடைந்து பீறிட்டு வெளியேறிய காவிரி குடிநீர்


குழாய் உடைந்து பீறிட்டு வெளியேறிய காவிரி குடிநீர்
x
தினத்தந்தி 30 April 2021 7:23 PM GMT (Updated: 30 April 2021 7:23 PM GMT)

குழாய் உடைந்து காவிரி குடிநீர் பீறிட்டு வெளியேறியது.



  முசிறி, மே.1-
  முசிறி அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டடு வெளியேறிய தண்ணீர் ஊற்று போல பீரிட்டு பாய்ந்த காட்சியை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் ராட்சத போர்வெல் அமைத்து துறையூர் தாலுகாவை சேர்ந்த 93 கிராமங்களுக்கு குழாய் அமைத்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று திருச்சி - நாமக்கல் மெயின் சாலையில் முசிறி அடுத்த வெள்ளூர் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக திடீரென உடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குழாய்உடைப்பில் இருந்து தண்ணீர் ஊற்று போல சுமார் 20 அடி உயரத்திற்குமேல் நோக்கி பீச்சியடித்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் நனைந்தவாறு சென்றனர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் பீரிட்டு வெளியேறிய தண்ணீரை ஆச்சரியத்துடன் பார்த்து நின்றனர். பின்னர் இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த அலுவலர்கள் உடனடியாக மின்மோட்டாரை நிறுத்தி தண்ணீர் வெளியேறுவதை அடைத்தனர். இந்த குழாய் உடைப்பினால் சுமார் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது.

Next Story