சன்னதி தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு


சன்னதி தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2021 2:02 AM IST (Updated: 1 May 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் உள்ள சன்னதி தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை கொரோனா தொற்று எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் சன்னதி தெருவில் தனியார் வங்கி மேலாளர் ஒருவருக்கும், அதே பகுதியில் உள்ள ஆடிட்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த தெருவில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் 14 நாட்களுக்கு அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்து, அறிவிப்பு பலகை வைத்தனர். மேலும் அந்த பகுதியில் தடுப்புக்கம்பிகள் வைத்து அடைத்தனர்.

Next Story