செம்பியன் மாதேவி சிலைக்கு மாலை


செம்பியன் மாதேவி சிலைக்கு மாலை
x
தினத்தந்தி 30 April 2021 8:42 PM GMT (Updated: 30 April 2021 8:42 PM GMT)

செம்பியன் மாதேவி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தில் செம்பியன் மாதேவியின் 1,111-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சோழப் பேரரசியான இவர் கண்டராதித்த சோழனின் மனைவியும், பேரரசர் ராஜராஜ சோழனின் பாட்டியும் ஆவார். அவரது புகழை உயர்த்தும் வகையில் அவரது சொந்த ஊரான செம்பியக்குடி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, அவரவர் வீட்டில் இருந்த உலோக பாத்திரங்கள் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றை கொண்டு ஆயிரம் கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன செம்பியன் மாதேவி சிலையை செய்து, கிராமத்தின் நடுவில் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாளையொட்டி அந்த சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. செம்பியன் மாதேவியின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story