கொரோனா கட்டுப்பாடு விதிமீறல்: சேலத்தில் 3 ஜவுளிக்கடைகளுக்கு `சீல்' வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


கொரோனா கட்டுப்பாடு விதிமீறல்: சேலத்தில் 3 ஜவுளிக்கடைகளுக்கு `சீல் வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 May 2021 2:48 AM IST (Updated: 1 May 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக 3 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் `சீல்' வைத்து தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

சேலம்:
சேலத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக 3 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் `சீல்' வைத்து தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஜவுளிக்கடைகளில் கூட்டம்
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், சேலத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை அதிகமாக அனுமதித்து வியாபாரம் நடத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 4 ரோடு அருகே அடுத்தடுத்து உள்ள ஜவுளிக்கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
`சீல்’ வைப்பு
அப்போது, 3 ஜவுளிக்கடைகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் இருந்ததும், வாடிக்கையாளர்களை அதிகளவில் கூட்டமாக உள்ளே வர அனுமதி அளித்திருப்பதும் தெரியவந்தது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமல் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் நின்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஜவுளிக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். பின்னர் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக 3 ஜவுளிக்கடைகளை `சீல்' வைத்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்ைக எடுத்தனர்.

Next Story