மாவட்ட செய்திகள்

பூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்; மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை + "||" + pettition

பூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்; மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை

பூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்; மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை
பூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அம்மாப்பேட்டை
அம்மாபேட்டை அருகே பூதப்பாடி அடுத்துள்ள எஸ்.பி.கவுண்டனூரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ரோட்டோரத்தில் ஒரு மின் கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதி சிமெண்ட் காரை பெயர்ந்து கம்பி வெளியே தெரியும்படி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த மின் கம்பத்தில் இருந்து வரும் மின் விளக்கின் வெளிச்சத்தில் தான் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள சிறுவர்-சிறுமிகள் விளையாடி வருகின்றனர். மேலும் காற்று காலங்களில் மின் கம்பம் அசைந்து ஆடி வருவதால் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் அலுவலகத்தில் மனு
கலெக்டர் அலுவலகத்தில் மனு
2. ஈரோடு மாநகர் பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- மாநகராட்சி ஆணையாளரிடம் தொழிலாளர்கள் மனு
ஈரோடு மாநகர் பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
3. குறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
குறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
4. குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை தடுக்க வேண்டும்; அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
5. மரக்கால் ஆட்ட கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிதி வழங்க வேண்டும்
மரக்கால் ஆட்ட கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிதி வழங்க வேண்டும் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது