ரெயிலில் அடிபட்டு புள்ளிமான் சாவு
ரெயிலில் அடிபட்டு புள்ளிமான் இறந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டை பகுதியில் நேற்று அதிகாலை புள்ளிமான் இரை தேடி சென்றது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. சென்னையில் இருந்து மதுரை வழியாக விருதுநகர் நோக்கி சென்ற ெரயில் மான் மீது மோதி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரியானது. தகவல் அறிந்து உசிலம்பட்டி வனச்சரக அதிகாரிகள் இறந்த மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர். அடிக்கடி வெறிநாய்கள் கடித்தும் ெரயிலில் அடிபட்டும் வாகனங்களில் அடிபட்டும் மான்கள் இறப்பதால் அந்தபகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story